திருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை
திருகோணமலை(Trincomalee) - சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (14.04.2024) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த 41 வயதுடைய எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
அனுராதபுரம் கண்னேவ பகுதியில் வசித்து வந்த திருமணமான சம்பிகா குமாரி என்பவர் கணவரை விட்டு பிரிந்து சேறுநுவர பகுதியில் மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முதலாவது கணவர் மனைவியை தேடி வந்து மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபரை கத்தியால் குத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்போது உயிரிழந்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன், சடலத்தை பார்வையிட சம்பவ இடத்திற்கு மூதூர் நீதவான் வருகை தந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
