துருக்கியில் கேபிள் கார் விபத்து: பல மணிநேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்
துருக்கி(Turkey) - அன்டலியா நகரில் கேபிள் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் 174 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி - அன்டலியா நகரில் 2,010 அடி உயரமுடைய மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.
மீட்பு பணிகள்
இந்த நிலையில் நேற்றையதினம் (14.04.2024) கேபிள் கார் ஒன்று அறுந்து விழுந்து பாறை மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தினால் ஏனைய கேபிள் கார்களை இயக்க முடியாத நிலை ஏற்றபட்டதை அடுத்து மலைக்கு மேல் கேபிள் கார்களில் 174 பேர் சிக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் 600 மீட்புக்குழுவினர் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
மீட்புப்பணிகள் இரவு முழுவதும் நடைபெற்ற நிலையில் சுமார் 23 மணித்தியாலங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |