வவுனியாவில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் ஒருவர் பலி (video)
வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (04.11.2022) பதிவாகியுள்ளது.
செட்டிகுளம் - துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் (வயது 55) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தொடருந்துடன் மோதுண்டு பலி
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
