பேலியகொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பேலியகொடை களனி பட்டிய ஹந்திய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேலியகொடை பொலிஸ் பிரிவின் ரயில் நிலைய வீதியில் குருகுல பாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri