கிளிநொச்சி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ - 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று(23.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பேருந்தை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam