புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் - கற்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலக்குடா பகுதியிலிருந்து தலவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் தலவில் பகுதியிலிருந்து பாலக்குடா நோக்கி வருகைத் தந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் பாலக்குடா தலவில் பிரதான வீதியில் இடம்பெறூள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலை
விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வயது சிறுமி உற்பட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கற்பிட்டி வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam