வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி அநுர
இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கிய தலைவராக தற்போதைய ஜனாதிபத அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
திலித் ஜயவீர தலைமையில் கணேமுல்ல நகரில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் திட்டம்
தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் எந்த மூலோபாயமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நான் தற்போதைய ஜனாதிபதியிடம் அன்றும் சுட்டிக்காட்டினேன். அவர் முன்வைக்கும் எந்த திட்டத்திலும் எவ்வித மூலோபாயமும் இல்லை.

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கியவராக தற்போது அவர் சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சியை எங்களிடம் கொடுங்கள் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan