மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கம்
உயிரிழந்த 27 வயதுடைய இளைஞர்,புல்வெட்டும் இயந்திரத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
