லொறியில் சிக்கி நபரொருவர் பலி! சாரதி தலைமறைவு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam