முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (01.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் செம்மலை பகுதியினை சேர்ந்த நாகராசா யோகராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.
விசாரணை
குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த நாகராசா யோகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள் மது போதையில் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri