யாழில் கடலாமையுடன் கரை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் நபரொருவர் கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அவரிடமிருந்து இரண்டு கடலமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சேத்தான்குளம் பகுதியில் கடலாமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகள், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகு என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள் இரண்டையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.