கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 லட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
பயணப் பொதிகள்
குறித்த நபருக்கு சொந்தமான பல பயணப் பொதிகள் கடந்த 26 ஆம் திகதி மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
குறித்த பயணப் பொதிகள் Missed package(காணாமல் போன பொதிகள்) களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் விமான நிலையத்தின் அறிவித்தலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப்பொதிகளை எடுத்துச் செல்ல குறித்த நபர் சென்றுள்ளார்.
இ-சிகரெட்டுகள்
விமான நிலையத்திலிருந்து பயணப் பொதிகளை விடுவித்த குறித்த நபர், அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையின் போது 245 இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 20 வயதுடையவர் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You May Like This Video
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
