அம்பாறையில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
அம்பாறை - இறக்காமம் பிரதேசத்தில் 6 கிராம் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(30) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று(30) இரவு இறக்காமம் பிரதேசத்தில் குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரை 6 கிராம் 300 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, 43 வயதுடைய பெண் ஒருவரையும் ஐஸ்போதை பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
