பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று(7) உத்தரவிட்டார்.
தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் மூன்று அலைபேசிக் கடைகளில் நான்கு கையடக்க அலைபேசிகளை திருடியமை, சில்லரைக்கடையொன்றினை உடைத்தமை, மற்றும் திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச்செயல்களில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளதாகவும், சந்தேக நபருக்கெதிராக எட்டு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.