திருக்கோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் வயது(76) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பேராறு பகுதியில் தனது காணிக்குள் மண் இட்டு செப்பனிட்டு வந்துள்ளார்.
இவ்வேளையில் இன்றைய தினம் உடைந்த கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று காணிக்குள் களி மண்களை கொட்டுவதற்காக பின்பக்கமாக செலுத்திய வேளை டயருக்குள் இறுகி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam