மன்னாரில் விபத்து : ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம்
மன்னார், நானாட்டான் - முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (25.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தில் இருந்து நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்த நிலையில் அந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் காணப்பட்ட பாலத்தினுள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை
இதன் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த வயது 28 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மற்றைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதோடு, உயிரிழந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri