நத்தார் தினத்தன்று இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித்தாக்குதல்: பலர் பலியாகியுள்ளதாக தகவல்
நத்தார் தினத்தன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவின் குடியிருப்பு பகுதியில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் அல்-மகாசி (Al-Maghazi) புலம்பெர்ந்தோர் முகாமில் உள்ள பல குடியிருப்பு வீடுகள், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் சுமார் 70 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் காயமடைந்த நிலையில், 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக தகவல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 70 பேரில் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக PRCS தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் காசா அதிகாரிகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
