கோவிட்டின் புதிய திரிபு தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு
கோவிட்டின் 'JN-1' என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக இலங்கையில் பதிவாகும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்
அத்துடன் கோவிட் வைரஸின் 'JN-1' என்ற உப திரிபின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் ஏற்கனவே பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்ஃப்ளூவன்ஸா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவலை முகமூடி அணிதல், சமூக இடைவெளியை பேனுதல் போன்றவற்றின் மூலம் குறைக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |