மன்னாரில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்
மன்னார் - மடு பிரமனாலங்குளம் பகுதியில் வவுனியா - செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம் - பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri