வவுனியா - ஓமந்தையில் வாகன விபத்து! ஒருவர் படுகாயம்
வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் மறுபக்கமாக திருப்பியுள்ளது.
இதன்போது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையை சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam