யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
யாழில் மோட்டார் சைக்கிள் ஒன்று வானுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வான் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டு கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு(25) 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam