முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் தகராறு: மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மரணம்
கம்பஹா (Gampaha) நிட்டம்புவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இளைஞன் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்த ஏனைய சாரதிகள் அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, அங்கிருந்த இளைஞரின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற முற்பட்டபோது, தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்துள்ளார்.

அவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri