முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த பாடசாலை மாணவி: சந்தேக நபர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(28.05.2024) இடம்பெற்றள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி நாள்தோறும் சந்தேக நபரின் கடைக்குச் சென்று வந்துள்ள நிலையில், சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மாணவி கர்ப்பம் தரித்திருப்பது வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
