வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து - ஒருவர் பலி இருவர் காயம்
வவுனியாவில் (Vavuniya) மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்து சம்பவம் நேற்று (21.4.2024) வவுனியா (Vavuniya) - பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் துரைசாமி லலிதராசா என்பர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மூவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு (Anuradhapura Hospital) மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri