உழவு இயந்திரம் மோதி ஒருவர் பரிதாப மரணம்: இருவர் படுகாயம்
களுத்துறையில் உழவு இயந்திரம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(24) தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட - புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்றுள்ளது.
புஹபுகொட நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் மற்றும் பின்புறத்தில் இருந்த இரண்டு பயணிகள் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam