பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபா கண்டுப்பிடிப்பு..
லஞ்சம் மற்றும் பணச்சலவை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம்(2) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட சதீஷ் கமகேவை செப்டம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பாக முன்னிலையான இரண்டு நபர்களான அவரது ஓட்டுநர் விஜேசிங்க மற்றும் அசிதா என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரால் இந்த நிதி வைப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரிவர்த்தனைகள் நேரடியாக சட்டவிரோத நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.



