வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக, கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பிரதான வீதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
விசேட சோதனை
அச்சோதனையின் போது, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.எம்.எஸ்.டி. பண்டார தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam