மன்னாரில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது(Video)
மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (19.12.2023) காலை மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் 354 டெட்டனேட்டர் குச்சிகள் உட்பட இணைப்பு நூல் 10 றோலும் மீட்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு
அமைய மேற்கொண்ட தேடுதலின் போதே குருநாகல் பகுதியில்
இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட
நிலையில் ஜெலட்னைட் (டைனமைட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் விசாரணையின் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




