அம்பாறையில் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறித்த கைது நடவடிக்கையை நேற்று முன்தினம் (05) இரவு முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டவை
இதன்போது ஐஸ் 760 மில்லிகிராம் உட்பட ஒரு தொகை பணமும் குறித்த சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைதானவர் பெரிய நீலாவணை பகுதி வீ.சி.வீதியை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவருகிறது.
இதற்கு முன்னரும் இச்சந்தேகநபர் கடந்த ஒரு தடவை போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணை
இச்சந்தேகநபர் வசம் இருந்து ஐஸ் 1800 மில்லி கிராம் மீட்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் இனிப்பு வியாபாரி போன்று நடமாடி போதைப்பொருளுடன் கைதானதாக கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








