போதைப்பொருளுடன் இருவர் கைது
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு சம்பவங்களில் நேற்று(1) இரவு 16 கிராம் 320 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு போதைபொருள் வியாபாரிகளை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு காவத்துமுனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து 5 கிராம் 320 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இதேவேளை, மக்களடி வீதி, வாழைச்சேனை-4 எனும் முகவரியில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள்
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற
பிணையில் வந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகாமல் மறைந்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்-ஷான்

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
