கிரானில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது
மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் வீடொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட 50 லீற்றர் கசிப்பு மற்றும் 40 லீற்றர் கோடாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றையடுத்து கிரானிலுள்ள குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கசிப்பினைக் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதான நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri