மன்னாரில் 24 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 24 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (18.01.2024) இடம்பெற்றுள்ளது.
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாடு கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன், தலை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் உள்ள காணியை சோதனையிட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடத்தப்படும் மாத்திரைகள்
இதன் போது குறித்த காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மில்லி கிராம் எடை கொண்ட 24 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், மீட்கப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதேவேளை அண்மைய நாட்களாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் போதை மாத்திரைகள் விற்பனைக்காக மன்னாரில் உள்ள சில கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு துறையினரால் மீட்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri