யாழில் கயிற்றின் மூலம் வானத்தை நோக்கி சென்ற இளைஞனால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற இளைஞன் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டத்தை பறக்கப் பயன்படும் கயிற்றில் சுமார் 30 அடி உயரத்திற்கு ஏறி செல்பி எடுத்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தை பறக்கவிட பயன்படுத்தப்படும் கயிற்றில் ஏறி குறித்த இளைஞன் செல்பி எடுத்துள்ளார்.
பட்டத்திருவிழா
காத்தாடி கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்திற்கு சென்று உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.