மூன்று கோடி ரூபா பெறுமதியான கடலட்டைகளுடன் ஒருவர் கைது
இலங்கைக்குக் கடத்த இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான கடலட்டைகளுடன் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் - பட்டிணம் காத்தான் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்ட 200 கிலோகிராம் கடல் அட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடரும் விசாரணை
இதன்போது அப்பகுதியில் கேணிக்கரைப் பொலிஸார் இருவரைச் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
மற்றைய நபர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குப்படுத்தப்பட்டபோது இலங்கைக்குப் படகு மூலம் கடலட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரியவந்தது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 6 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri