விசேட சோதனையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக, கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பிரதான வீதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
அச்சோதனையின் போது, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.எம்.எஸ்.டி. பண்டார தெரிவித்துள்ளார்.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri