4 வயது சிறுமிக்கு மது பருக்கிய நபர் கைது
ஹட்டன்(Hatton) - மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்தில் 4 வயது சிறுமிக்கு மது அருந்தக் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(10.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த பிள்ளையின் தாய் மாமனே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு பணிக்குச் சென்றுள்ளார்.

இவர்கள் உலப்பனை பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தாய் சவூதி அரேபியா சென்ற போது 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளையும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட்டன் தோட்டத்தில் தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகள் பாட்டியின் வீட்டில் இருந்த வேளை தாய் மாமன் அடிக்கடி குழந்தைகளை பார்க்க வந்து இவ்வாறு மதுபானத்தை பருக்கி உள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சிறுமியின் 9 வயதுடைய சகோதரன் உலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் படி, நேற்று(10) மாலை மஸ்கெலியா பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam