மலையக தியாகிகளை நினைவு கூரும் தினம்: நாடாளுமன்றத்தில் பிரேரணை முன்வைப்பு
மலையகத் தொழிற்சங்கத் தியாகிகளை நினைவு கூருவதற்கான தினமொன்றைப் பிரகடனப்படுத்த கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி (Kandy) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் (Velu Kumar) முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் நாளைய தினம் (12.07.2024) விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதன்போது, ஜனவரி 10ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்துமாறு வேலுகுமார் எம்.பி. கோரிக்கை முன்வைக்கவுள்ளார்.
அரச அங்கீகாரம்
மேலும், மலையகத் தொழிற்சங்கத் தியாகிகளை நினைவுகூருவதற்கு அரச அங்கீகாரத்தடன் தினமொன்று அவசியம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தாலும் பல வருடங்களாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே வேலுகுமாரினால் இந்த தனிநபர் பிரேரணை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |