மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற இளைஞர் ஒருவரை மதுபான போத்தல்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் கூளாவடி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இளைஞனை பொலிஸார் வழிமறித்த பேர் அவர் மோட்டார் சைக்கிளில் 100 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை எடுத்துச் சென்ற நிலையில் அவரை கைது செய்ததுடன், 100 போத்தல் மதுபானங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் எனவும் >இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
