விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக வீதியில் இறங்கி உறவுகள் போராட்டம்
விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று ஒன்று கூடிய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
இதேவேளை, கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். எனினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதி ஊடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார் போராட்டகாரர்களை வீதியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
