ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாட்டு எல்லைகளை மூடிய இஸ்ரேல்
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் தமது நாட்டுக்குள் வரவும் அந்நாடு தடைவிதித்துள்ளது.
இந்த தடையானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன் அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்தது 14 நாட்களுக்கு இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பெனட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இத்தாலியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மொசம்பிக் நாட்டில் இருந்து இத்தாலியின் மிலான் நகருக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் திரிபு மிக சக்தி வாய்ந்த வைரஸ் திரிபு என்பதுடன் இது உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 33 நிமிடங்கள் முன்
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan