ஒமிக்ரோன் தொற்றாளர் இரவு நேர களியாட்ட விடுதிக்கும் சென்றுள்ளார்
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளான மூன்று பேர் சம்பந்தமான இதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வந்த இந்த நபர், இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கி இருந்துள்ளதுடன் அவர் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்றுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள உபுல் ரோஹன. இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பற்றி தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவோ அல்லது இரசாய ஆய்வுக் கூடங்களோ எமக்கு இதுவரை அறிவிக்கவில்லை.
இவர்களில் இந்தியாவில் இருந்து ஒருவர் வந்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்த இவர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர். அத்துடன் அவர் இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்றவில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த அவர், மீண்டும் திரும்பிச் செல்லும் போதே அவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் அவசியம் என்பது இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இனியாவது அதிகாரிகள் இது சம்பந்தமாக கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
