ஒமிக்ரோன் வைரஸ் என்பது மிக ஆபத்தானவை : இரா.துரைரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்திற்கு மத்தியில் கோவிட்டின் புதிய தொற்றான ஒமிக்ரோன் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் மக்கள் அதனை உணர்ந்து செயற்படவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்,பத்மநாபாமன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்,பத்மநாபாமன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் இன்று(2) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்திற்கு மத்தியில் கோவிட்டின் புதிய தொற்றான ஒமிக்ரோன் தாக்கம் அதிகரித்துள்ளது. மூன்று தடவைகள் தடுப்பூசி செலுத்தியவர்களில் ஒரு சிலர் தொற்று காய்ச்சல் எனவும், மூன்று ஊசி செலுத்தாதவர்கள் காய்ச்சல் என்று இருப்பதும் சமூகத்திற்கு மத்தியில் பல சம்பிரதாய நிகழ்ச்சிகளும், சமூகத்தின் தேவைக்கேற்றவாறான நிகழ்ச்சிகளும் அரசு, நிறுவனங்களின் நிகழ்ச்சிகளும், பாடசாலை தொடக்கம் அத்தியாவசிய தேவைகள், மரணவீடுகள் வரை மக்களின் நெருக்கமான வாழ்க்கை முறையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆபத்தான கோவிட் ஓமிக்ரோன் எனச் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் சமூகத்திலுள்ளவர்களின் மீறல்களை எவ்வாறு கட்டுப் படுத்த முடியும்? ஆனால் அரச நிருவாகங்களோ, நிறுவனங்களோ தங்களின் நிருவாகத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சி நிரலைக் கட்டுப்படுத்த முடியும்.
இதேபோல் சமூகத்திற்கு மத்தியில் நடைபெறும் மங்களகரமான நிகழ்ச்சிகள், புனித ஸ்தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், துக்ககரமான சம்பவங்கள், அனாவசிய ஒன்று கூடல்கள், மற்றும் போக்குவரத்து, ஏனைய அத்தியாவசியத் தேவைக்கான செயற்பாடுகள், தொழில் கடமைகள், நாளாந்த தொழில் செயற்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
ஒமிக்ரோன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிசமான வறுமையும், பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டதை எவராலும் மறுதளிக்க முடியாது. குறிப்பிட்ட வருடத்திற்குள் ஈடு செய்யவும் முடியாது. மாவட்டத்திலுள்ள சுகாதாரப் பிரிவு ஏனைய இது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள், பிரிவுகள், தனிநபர்கள் மிகவும் கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டாலும் சமூகத்திற்கு மத்தியில் ஓமிக்ரோன் தாக்கம் அதிகரித்தே காணப்படுகின்றது.
ஒருபக்கம் சுகாதாரப் பிரிவினர் சிறப்பாகச் செயற்படுவதற்கு அரசு கோவிட் தொடர்பான பல தேவைகளை, குறைபாடுகளை உட்கட்டுமான பணிகளை அறைகுறையில் வைத்துக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் எவ்வாறு இங்குள்ளவர்களால் சிறப்பாகச் செயற்பட முடியும்?
இங்குள்ள சுகாதாரப் பிரிவினர் இரவு, பகல் பாராது முழு மூச்சாகச் சேவையில் ஈடுபடுவதோடு, தங்களது உயிர்களைப் பொருட்படுத்தாது, தங்களது குடும்பங்களைப் பொருட்படுத்தாது பலர் செயற்படுவது அவர்களின் சிறப்பான செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாகும்.
மத்திய, மாகாண அரசு மாவட்டத்திலுள்ள சுகாதார செயற்பாடுகளை கோவிட் (ஓமிக்ரோன்)
தொடர்பான செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு முழு ஒத்துழைப்புக்களையும்
மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri