இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரொன் கோவிட் திரிபு: நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் (VIDEO)
உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரொன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மாறுபாடு தொடர்பாக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் எடுத்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் ‘ஒமிக்ரொன்’ மாறுபாடு கண்டறியப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை எனவும் நாட்டு மக்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கோவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரொன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொற்று 29 நாடுகளிலும் இதுவரை மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தமது எல்லைகளை மூடியுள்ளதுடன், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
