ஒமிக்ரோனுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள மொடர்னா தடுப்பூசி நிறுவனம்!
ஃபைஸர் தடுப்பூசியை தொடர்ந்து, மொடர்னாவும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயற்படும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சோதனையை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மொடர்னா நிறுவனம் ஒமிக்ரோன் வைரசை எதிர்கொள்ள பிரத்தியேகமாக பூஸ்டர் தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
இதற்காக இரண்டு தடுப்பூசி அளவு மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட 600 பேரிடம் இந்த சோதனையை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களில் பாதி பேர் 6 மாதங்களுக்கு முன்னர் மொடர்னா தடுப்பூசியின் 2 அளவுகளையும் போட்டுக்கொண்டவர்கள் ஆவர்.