ஓமந்தை அலைகல்லுப்போட்ட குளம் உடைப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வவுனியா (Vavuniya)-அலைகல்லு போட்டகுளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, மாளிகைக் குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து, அந்தப் பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓமந்தை (Omanthai)- பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் அந்தக் குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam