யாழில் சிறீதரனின் பங்குபற்றலுடன் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) பங்குபற்றுதலுடன் மானிப்பாயில் மாவீரர் பெற்றோர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று (26) மாலை நடைபெற்றது.
இதன்போது யாழ் மானிப்பாய் பகுதியினை சேர்ந்த மாவீரர்களின் பெற்றொர் ஈகை சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
பெற்றோர்கள் கௌரவிப்பு
தொடர்ந்து பெற்றோர்கள் ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு தனது அஞ்சலிகளை செலுத்தினார்.
மேலும், செம்பியன்பற்று வடக்கு இளைஞர்கள் மற்றும் மக்களால் மாவீரர்கள் மற்றும் இறுதி போரில் களத்தில் காணமாக்கப்பட்டோரின் உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வானது செம்பியன்பற்று வடக்கு கடல்தொழிழாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஒருவரால் நினைவேந்தல் ஏற்றி உரித்துடையோர்க்கு சிறிய உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
