யாழில் மூதாட்டியின் சடலத்தைக் காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய் (Video)
யாழ்ப்பாணம், தென்மராட்சி - மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் சிறிய வீட்டில் வசித்து வந்த தம்பையா சறோசா (வயது 82) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (27.07.2023) மட்டுவில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள பால் சாலைக்குச் சென்று திரும்பும்போது மூதாட்டியின் நாய் பெண்ணின் ஆடையைப் பிடித்து மூதாட்டியின் வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளது.
வீட்டினுள் மூதாட்டி சடலமாகக் காணப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மட்டுவில் வடக்கு கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மூதாட்டி உயிரிழந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உடல் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து மூதாட்டியின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri