யாழில் முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை
யாழ்ப்பாணம்- கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் குறித்த முதியவரை மூங்கில் கம்பத்தால் தாக்கியுள்ளதாக அவரின் மனைவி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த முதியவர் வாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வீட்டிற்கு அழைத்துச் சென்ற முதியவர்
அவரை பராமரிப்பதற்கு வைத்தியசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் 2500 ரூபா சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பராமரிப்பாளரே இவ்வாறு முதியவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அந்த முதியவரை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan