க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்
நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த தும்புள்ள மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் நிம்சாரா அபிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவன் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை
மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்றதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் மீதான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறியினால் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இன்னும் இரண்டு வாரங்களில்... புடின் - ஜெலென்ஸ்கி தொடர்பில் உறுதி செய்த ஜனாதிபதி ட்ரம்ப் News Lankasri
