வடக்கு கிழக்கில் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்கள்
வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை முடிவுகள் அடிப்படையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய
பாடசாலை மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த பாடசாலையின் 58 மாணவிகள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அடிப்படை வசதிகளுமற்ற கிராமம்
இந்நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக கல்வி நிர்வாக பிரதி கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி - கீதன்
யாழ்ப்பாணம்
வெளியாகிய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் வருமாறு யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி க.பொ.த (சா/த) 2023 சிறந்த பெறுபேறுகள் கே.கேசவன் 9A,சு.சதுர்சன் 8AC, தி.திகழ்மதி 8AC, சி.பாவரசன் 7A2B, சி.கஜீபா 7ABS, த.தேனுகா 6A3B, ம.டினுசா 5A2B2C, சி.சீரன் 5AB3C, சி.டர்சன் 4A4BC, செ.பதுஸ்காந் 4AB4C, அ.சாத்வீகன் 4A3B2S சித்திகளைப் பெற்றுள்ளனர்.
செய்தி - கஜி
மேலும், துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய முல்லைத்தீவு ஐயன்கன் குளம் மாகாவித்தியாலய மாணவி இன்பராசா நிலாயினி வரலாற்றில் முதன்முறையாக 9A சித்தியினை பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளார்.
எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |